Forces Series 3rd Match on Nov 03, 2023 in Badulla Cricket Stadium

About in Tamil

மன்றத்தின் பெயர் 

இதன் பெயர் ஊவா போர்சஸ் நிறுவனம் என அறியப்படுதலும் அழைக்கப்படுதலும் வேண்டும். ஆங்கிலத்தில் Uva Forces Foundation என அறியப்படுதலும் அழைக்கப்படுதலும் வேண்டும். பொதுவாக அனைத்து இடங்களில் ஆங்கிலத்தில் பெயர் படுத்தப்படலாம்.

மகுட வாசகம் 

"பிரகாசமான விளையாட்டின் எதிர்காலத்திற்கான அடித்தளம்" 

உருவாக்கம்

விளையாட்டின் ஊடாக திறன் மிக்க சமூகத்தை உருவாக்குவதுடன் விளையாட்டில் ஆர்வமிக்கவர்களை உருவாக்குதல் மற்றும் அறிவினை விருத்தி செய்தல் நோக்கத்துடன் 2015ம் ஆண்டு மே மாதம் 01ம் திகதி யுனைட்டட் ஒப் ஊவா போர்சஸ் விளையாட்டுக் கழகம் - (United of Uva Forces Sports Club) அண்தோனியார் புனித சேவியர் புரம், கோணக்கலை மேற்பிரிவு, பசறை எனும் முகவரியில் நெடுஞ்செழியன் சீகன் போல், ஆறுமுகம் கலைராஜ் என்பவர்களால் உருவாக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பதுளை மாவட்டத்தை சேர்ந்த 11க்கும் அதிகமான இளைஞர்களிகளின் நேரடி பங்களிப்புடன் கடினப்பந்து கிரிக்கட் அணியினை உருவாக்கி 2015 முதல் Uva Forces Cricket  எனும் பெயரில் கிரிக்கட்; பயணம் ஆரம்பிக்கப்பட்டது. இதனுடைய அடுத்தக் கட்ட நடவடிக்கையாக விளையாட்டு துறையை முன்னோக்கி செல்வதற்கு நெடுஞ்செழியன் சீகன் போல், ஆறுமுகம் கலைராஜ் என்பவர்களால் ஊவா போர்சஸ் நிறுவனம் (Uva Forces Foundation) ஆனது 2023 ஆண்டு மே மாதம் 01ம் புனித அண்தோனியார் சேவியர் புரம், கோணக்கலை மேற்பிரிவு, பசறை எனும் முகவரியில் ஸ்தாபிக்கப்பட்டது.

முகவரி

புனித சேவியர் புரம், கோணக்கலை மேற்பிரிவு, பசறை. 

நிறுவனத்தின் கொடி மற்றும் சின்னம்

நீலம் (Royal Blue) வர்ணத்தில் முழுவதுமாக காணப்படுவதுடன், மத்தியில் வெள்ளை வர்ணத்தில் ஒரு வர்ணத்திற்குள் மன்றத்தின் சின்னம் நீலம் (சுழலயட டீடரந) வர்ணத்தில் காணப்படும்.

நிறுவனத்தின் உத்தியோகபூர்வ வர்ணம் நீலம் (Royal Blue) ஆகும்.

நிறுவனத்தின் உத்தியோகபூர்வ சின்னம் மற்றும் சந்தர்பத்திற்கமைய சின்னம் பயன்படுதப்படும் முறைமைகள் கீழே காட்டப்பட்டுள்ளது.

நிறுவனத்தை நடைமுறைப்படுத்துவதற்கான குறிக்கோள்கள்

இலங்கை வாழ் பிரஜைகள் ஒவ்வொருவரும் ஜனநாயகமாக வாழவும் சமத்துவமான உரிமைகளை பெற்றுக் கொள்ளவும் உரித்துடையவர்கள் ஆகின்றனர். இருந்த போதிலும் பெரும்பான்மை சமூகத்திற்கு கிடைக்கக்கூடய வளங்களோ, வரப்பிரசாதங்களோ சிறுபான்மையினருக்கு குறிப்பாக மலையக சமூகத்துக்கு சென்றடைகிறதா என்பது விடை காணாத புதிராகவே விளங்குது. இந்நிலையில் இருந்து விடுபட்டு சற்று முன்னோக்கி செல்வதற்காக இன்றைய சமூகத்தினரை உடலளவிலும்,உளவியல் ரீதியாகவும் வளுப்படுத்தி அவர்களிடம் காணப்படும் விளையாட்டு திறன்களை மேம்படுத்துவதற்கான முயற்சியின் விளைவு எமது நிறுவனம் ஆகும்.

விளையாட்டு முக்கியத்துவம்

நவீனமயப்படுத்தப்பட்ட உலகில் மைதான விளையாட்டுகளை தற்பொழுது காணொளி விளையாட்டுகளாக வீட்டிற்குள்ளே விளையாட தொடங்கி விட்டோம். இந்நிலையை தொடருமாய் எதிர்கால இளைய சமூகம் சுறுசுறுப்பற்ற மந்தப் ழ

போசன நிலைக்கு தள்ளப்படும் வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றன. ஆகவே வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் சமூகத்தினை வெளிக்கொண்டு வருவதுடன்  விளையாட்டுத் திறன்களை விருத்தி செய்து குறுகிய காலத்துக்குள் தேசிய அளவிலான வீரர்களை மெய்வ விளையாட்டுகளில் பங்கு பெற செய்தலும், மலையக மண்ணின் பொக்கிஷங்களான எம்மவருக்கான விளையாட்டு வாய்ப்புகளை ஏற்படுத்துதல்.

எங்களது செயற்பாடு

பசுமையான உலகை நோக்கிய பாதையில் விளையாட்டுகளையும், விளையாட்டுத்திறன்களையும் விருத்தியடையச் செய்வதன்  மூலம் தேசிய ரீதியில் விளையாட்டுகளுக்கான  விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்காக எமது பங்குதாரர்களிடம் பதிவு கட்டணங்களையும், மாதாந்த சந்தா கட்டணங்களையும் மற்றும் வருடாந்ந அமுலாக்கச் செயற்பாடுகளுக்கு சமூகத்திடம் இருந்து கிடைக்கப்பெரும் நீதியுதவிகளையும் பெற்றுக் கொள்வதுடன்  வீரர்களை பயிற்றுவிப்பதற்கான கட்டணங்களையும் ஆறவிட்டு எமது நிதியத்தின் தேவைகளை நிர்வாகத்தின் ஒப்புதலின் பேரில் பயன்படுத்தப்படும்.

எமது பணி

நாங்கள் ஒரு தொண்டு நிறுவனத்தை நிர்வாகிக்கிறோம். இது இலாபத்திற்காக  அல்லாமல் மலையாக சமூகத்திலு மாற்றத்தை ஏற்படுத்த விளையாட்டை சிறந்த ஊடகமாக பயன்படுத்துகிறோம். ஆரோக்கியமாக மற்றும் செழிப்பான மலையக இளைஞர்களை வெளி கொணரவும்,மலையக இளைஞர்கள் அனுபவிக்காத விளையாட்டுகளையும், விளையாட்டு வாய்ப்புகளையும் மற்றும் விளையாட்டு வளங்களையும் கொண்டு சேர்க்கும் பணியை மேற்கொள்கிறோம். குறிப்பாக தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் விளையாட்டுகளில் பங்கு பற்ற கூடிய வலிமை மிக்க சமூகத்தினராக நாம் இருந்த போதிலும் பெம்பாலான இடங்களில் புறக்கணிக்கப்பட்டவர்களாகவே இன்றும் பின்தள்ளப்படுகின்றோம். இதற்காக உண்மையான காரணம் நம் மலையகத்தினர் என்பது அல்ல சரியான பயிற்சியும், முறையான வழிகாட்டலும், விளையாட்டு உபகரணங்களில் பரிட்சியம் இல்லாததுமே ஆகும். இந் நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி புதியதொரு புரட்சியை ஏற்படுத்த முனைகிறது எமது நிறுவனம்.


No comments:

Post a Comment

Battle of Passara Cricket Festival 2024

Uva Forces Foundation Present B/ Gonakelle Tamil Maha Vidyalayam & B/ Passara Tamil National School both schools Old Boys Cricket Tourna...

1 / 4
2 / 4
3 / 4
4 / 4